இறந்து விட்டதாக கூறிய இயக்குனர் உயிருடன்…

இயக்குனர் பி.வாசு இறந்து விட்டதாக கூறி வைரலாகி வந்த வதந்திகளுக்கு அவரே முற்று புள்ளி வைத்துள்ளார்

P-Vasu

நான் நலமுடன் உள்ளேன் வதந்திகளை நம்ப வேண்டாம் என வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் பி.வாசு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் இறந்து விட்டதாக நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, பி.வாசு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் தான் நல்ல நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்து விட்டதாக தனக்கே வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.