பெண்கள் குடித்தால், வேலை செய்தால் என்ன தவறு?? – அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் புதிதாக 2000 மதுபானசாலைகள் நிர்மாணிக்கப்பட்டதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

Capturevfvfvdx

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது, மதுபானசாலைகளின் நேர மாற்றம் மற்றும் பெண்கள் மதுக்கடைகளில் வேலை செய்தல் போன்ற சுற்று நிரூபம் தொடர்பாக கேள்வி தொடுக்கப்பட்டது.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, அத்துடன் உலகின் பல நாடுகளில் பெண்கள் போர் விமானங்களை செலுத்துகின்றார்கள். இவ்வாறு இருக்க அவர்களை வேலை செய்யக்கூடாது என்று கூறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

ஆகவே பெண்கள் குடிக்கக்கூடாது. நாங்கள் மட்டுமே குடிப்போம் என ஆண்களால் கூற முடியாது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டன, 2000 பாடசாலைகள் மூடப்பட்டன. ஆனால் புதிதாக 2000 மதுபானசாலைகள் நிர்மாணிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.