கற்றாழையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..

இயற்கையாகவே அளவுக்கு அதிக நன்மைகளை தருவது கற்றாழை. அதிக மருத்துவ குணங்களும், ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என அனைத்தும் இதில் கிடைக்கின்றன.

aloe-vera-acne

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கற்றாழையின் பயன்களை பார்க்கலாம்.

குறைந்த மெட்டா பாலிசத்து கொழுப்புகள் நம் உடலில் தங்கிa உணவு சீரணிக்க முடியாமல் போகிறது. இதை போக்க கற்றாழையில் உள்ள கால்சியம், மக்னீசியம், செலினியம் மற்றும் காப்பர் ஆகிய தாதுக்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையான ஊட்டச்சத்தை தருகிறது.

உடல் உறுப்புகள் நன்றாக வேலை செய்யாமல் இருக்க நச்சுக்களை அழிக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு. அதனால் கற்றாழை ஜூஸை பருகினால் நச்சுக்கள் வெளியேறும்.

கீழ்வாத நோய்க்கு பெரிதும் பயனுள்ளதாக கற்றழை இருக்கிறது. கற்றாழையில் உள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ், சாலிசைலிக் என்ற அமிலம் மூட்டில் அழற்சியை உண்டாக்காமல் பாதுகாக்கி்றது.

8 வகையான அமினோ அமிலங்கள் கற்றாழையில் இருப்பதால் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சில நேரங்களில் சாப்பிட்டு முடித்ததும் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுத்தும். இதை கட்டுப்படுத்த அல்கலைன் தன்மையை உண்டாக்கி pH அளவை கற்றாழை சமன் செய்கிறது.

கற்றாழை ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிகிறது என பல ஆராய்ச்சிகளில் நிருபிக்கப்பட்டுள்ளது. இதயத்திற்கு தேவையாக ஆரோக்கியமான, தூய்மையான இரத்தம் கிடைக்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள கொலாஸ்ட்ராலின் அளவினை குறைப்பதால் இதய துடிப்பு சீராக அமையும்.

பாலிசாக்ரைடுகள் மைக்ரோபேஜஸ் என்ற வெள்ளை உயிரணுக்களின் அளவை அதிகரிக்கும் கற்றாழை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

சுற்றுப்புற மாற்றத்திற்கேற்ப நம் உடலில் நோய்க்கிருமிகள் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதை கற்றாழை அதற்கு ஏற்றவாறு நம் உடலை பாதுகாக்கிறது.