உத்திர பிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் 26 வயதுள்ள வாலிபர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிப்பது இளம்பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வாலிபருடன் இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதை அறிந்த இளம்பெண்ணின் அண்ணன் காதலன் வீட்டில் இருக்கும் அனைவரையும் கடத்தி சென்றுள்ளான். மேலும் கடத்திச் சென்ற வாலிபரின் தாயை சீரழித்து தலைமறைவாகியுள்ளான்.
இதையறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளனர். பின் இளம்பெண்ணின் அண்ணன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.







