கடும் குளிரினால் மூழ்கிப் போன கொழும்பு!

இலங்கையில் பல பகுதிகளில் மாறுபட்ட காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நாட்களில் வறட்சியாக காலநிலையை எதிர்பார்க்க முடியும். ஆனாலும் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரான காலநிலையும் மதிய வேளையில் வெப்பமான காலநிலையும் நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான மாறுபட்ட காலநிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியாவில் பனித்துளிகள் விழுவதனால் அதிக குளிருடனான காலநிலை நிலவுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் என்றுமில்லாதவாறு கடும் குளிரான காலநிலை நிலவுதாக பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுவொரு புது அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.