இன்றைய ராசிபலன் (06.01.2018)

  • மேஷம்

    மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தா
    பம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உடல் நலம் சீராகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்துப் போகும்.   எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்
    பாராத சந்திப்பு நிகழும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • மகரம்

    மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தாயார் ஆதரித்து பேசுவார். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.