அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையிலான புத்தகமொன்று, அதன் வெளியீட்டு நாளுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் ட்ரம்பிற்கு அப கீர்த்தியை ஏற்படும் வகையிலான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை வெளியிட தடை விதிப்பதற்கு ட்ரம்பின் வழக்கறிஞர்கள் முயற்சித்ததையடுத்தே இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஃபயர் அன்ட் ஃப்யூரி எனப்பெயரிடப்பட்ட குறித்த புத்தகம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முதல் குறித்த புத்தகம் கடைகளில் கிடைக்கும் என புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் வொல்ப் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தில் ட்ரம்ப் தொடர்பில் அவதூறான கருத்துக்கள் பல இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் மகன் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பிலும் விடயங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளை மாளிகையில் முன்னாள் உதவியாளரும் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகருமான ஸ்டீவ் பென்னனின் கருத்துக்கள் மற்றும் விமர்சினங்கள் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டீவ் பென்னன், கடந்த ஆகஸ்ட் மாதம் ட்ரம்பினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த புத்தககத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் பொய்யானவை எனவும், புனைவுக்கதைகள் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.







