அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 05) அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை.