கதாநாயகியான பிக்பாஸ் ஜூலி…

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் இளைஞர்களின் போராட்டம்… கடந்த ஆண்டு நம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்தியே ஆக வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் தான் . இதில், அரசியல் தலைவர்கள் குறித்து ஊடகங்களின் வெளிச்சத்தில் அவதூறாகக் கத்தியே பிரபலமானவர்தான் ஜூலி.

x23-1514011938-biggboss-julie-acting-in-a-add-film-about-appalam.jpg.pagespeed.ic_.okf0xjuDTyஇந்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு… பிரபலங்கள் விளையாடிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் ‘வீர தமிழச்சி என்கிற அடையாளத்துடன் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இவரை பலர் ஆதரித்தாலும் இவர் நடந்துகொண்ட விதம் பலரிடமும் வெறுப்பை சம்பாதிக்க வைத்தது.

இதைத் தொடர்ந்து தற்போது பிரபல தனியார் தொலைக் காட்சியில், தொகுப்பாளினியாக உள்ளார் ஜூலி. இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்குப்பிடித்து விட்டது. மேலும் இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.