யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
40 வயதான கீர்த்திகா லக்ஷானி என்ற ஆசிரியையே டெங்கு நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில், காய்ச்சல் மற்றும் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெங்கு நோய் தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் மர்ம காய்ச்சல் நிலவுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காய்ச்சல் காரணமாக 21 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







