வவுனியாவில் சர்ச்சைக்குரிய பழைய பேரூந்து நிலையம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது.
புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ. போ. ச பேருந்துகள் சேவையில் ஈடுபடவேண்டும் கூறப்பட்டமையினால் நள்ளிரவு 12 மணிமுதல் பழைய பேரூந்து நிலையம் நகரசபை மற்றும் பொலிஸாரினால் மூடப்படுள்ளது.
இதேவேளை புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 1800 மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட தமது சங்கத்தினை வெளியேறுமாறு தெரிவித்து முதலமைச்சர் கூட்டத்தை நடத்தியதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஓர் நீதியரசராக இருந்தவர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன் 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேரூந்து நியைலத்தில் இருந்து எம்மை வெளியேற்ற கோருவது நியாயமற்றது என்றும் கூறியுள்ள நிலையில் தொழிலாளர்களின் நலன்கருதி இன்று முதலாம் திகதியில் இருந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






