ஜி.எஸ்.பி வரிச் சலுகை இன்றுடன் முடிவு!

அமெரிக்காவின் பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் செயற்திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்பட்டுவந்த விசேட வரிச் சலுகை இன்றுடன் முடிவடைகின்றது.

ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை இன்றுடன் முடிவு!

இந்த வரிச் சலுகையை வழங்குவதை அமெரிக்க காங்கிரஸ் மீண்டும் உறுதிப்படுத்தாத நிலையில் இந்த வரிச் வலுகை முடிவுக்கு வரவுள்ளது. ஸ்ரீலங்கா உட்பட 122 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐயாயிரம் பொருட்களுக்கு அமெரிக்காவின் பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் செயற்திட்டத்தின் கீழ் விசேட வரிச் சலுகை வழங்கப்பட்டுவந்தது.

2015 ஆம் ஆண்டு யூன் 29 ஆம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா இதற்கான விசேட அனுமதியை வழங்கியிருந்தார்.

எனினும் இந்த பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் செயற்திட்டத்தின் கீழான விசேட வரிச் சலுகையை ஸ்ரீலங்கா உட்பட ஏனைய நாடுகளுக்கு தொடர்ந்தும் வழங்குவதற்கான அனுமதியை நீடிப்பதற்கு அமெரிக்கா காங்கிரஸ் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதற்கமைய இன்று 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியுடன்  ஸ்ரீலங்கா உட்பட ஏனைய உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவந்த பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் செயற்திட்டத்தின் கீழான விசேட வரிச் சலுகைமுடிவுக்கு வரவுள்ளது.

எனினும் இந்த வரிச் சலுகை இரத்து, ஸ்ரீலங்காவின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.