பிச்சை எடுப்பவர்களை காட்டிக் கொடுத்தால் பரிசு!

தெலுங்கானாவில் பிச்சை எடுப்பவர்களை காட்டிகா கொடுத்தல் ரூபா 500 பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

This-Is-The-Main-Reason-Why-India-Is-Known-As-A-Beggar’s-Country1இதனடிப்படையில் தெலுங்கானா மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு  முடிவு எடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் இதுவரை 741 ஆண் பிச்சைக்காரர்களுக்கும் 300 பெண் பிச்சைக்காரர்களும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில சிறைத்துறை மற்றும் ஐதராபாத் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு செயற்திட்டம் தொடங்கப்பட்டு பிச்சை எடுப்பவர்களுக்கு வீடு,உணவு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் தற்போது பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களை காட்டிக் கொடுத்தால் 500 ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.