18 வருடங்களின் பின் மனைவி பிள்ளையை சந்தித்த நபர்!

யாழ்ப்பாணத்தை் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளையை 18 ஆண்டுகளின் பின்னர் நேற்று 27ம் திகதி அவுஸ்திரேலியாவில் வைத்து சந்தித்துள்ளனர்.

Capturecxdfvxபி. பகிதரன் எனும் குறித்த நபர் திருமணம் செய்து நான்கு ஆண்டுகளின் பின்னர் விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டு அந்த அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இறுதி யுத்தம் வரை அந்த நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்திருந்துள்ளதுடன், பின்னர் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை பெற்ற பின்னர் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று தனது மனைவியையும் பிள்ளையையும் தேடிய போதிலும் பகிதரனால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியைப் போன்ற ஒருவரை கண்டுள்ள பகிதரன், அவுஸ்திரேலியாவில் இருக்கும் தனது நண்பர் ஒருவருக்கு தகவலை வழங்கி குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் பெற்றுக் கொண்ட தகவல்களின் படி தனது மனைவியை அறிந்து கொண்டுள்ளார்.

கணவர் யுத்தத்தின் போது பகிதரன் உயிரிழந்து விட்டதாகவே மனைவியிடம் பலரும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பின்னர் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இருவரும் சந்தித்துக் கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

அத்துடன் பகிதரன் பணம் செலுத்தி படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல இரண்டு தடவைகள் முயற்சித்த போதிலும் அதுவும் பலனளிக்கவில்லை.

இறுதியில் பகிதரனின் நண்பன், குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பகிதரனின் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துச் சென்று விடயத்தை விளக்கியதையடுத்து, பகிதரனுக்கு அவுஸ்திரேலியாவுக்கு சென்று மனைவியையும் பிள்ளையையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் பிரிந்து சென்று 18 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு சந்தித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.