இலங்கையின் பிரபல சிங்கள பாடகி ஜின்ஜரின் கார் சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெனியாய இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே இவ்விபத்து நடந்துள்ளது.
மேலும் விபத்து இடம்பெறும் போது காரில் 4 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் தெனியாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்ஜின்ஜர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்துக்கான காரணம் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தர்ப்பத்தில் காரில் ஜின்ஜர் உள்ளிட்ட அவரின் 7 வயது மகன் மற்றும் அவரின் உறவினரின் மகனும் மற்றும் சாரதி ஆகியோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.