திவர்யதர்ஷினி, கணவரை விவாகரத்து செய்கிறார் ..?

விஜய் டி.வி தொகுப்பாளர் டி.டி என்ற திவ்யதர்ஷினி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழின் முன்னணி தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவரான விஜய் டி.வி புகழ் டி.டி தனது வசீகரிக்கும் பேச்சால் இளைஞர்கள் பலரையும் கவர்ந்தவர்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் உதவியாளரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களாக இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்வதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர் தற்போது விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது டிடி கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.