சரிந்தது சாம்ராஜ்யம்…சூனியமான மோடியின் எதிர்காலம் : குஜராத் சரிவுக்கு காரணம் இதுதான்..!! வெளியான பரபரப்பு தகவல்!
டெல்லி : சர்வ வல்லமை படைத்த பிரதமர் என பிஜேபி-யினரால் புகழப்படும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் அவர் சார்ந்த பா.ஜ.க கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பா.ஜ.கவுக்கு சாதகமாக முடிவுகள் வெளியான நிலையில், காலை 9 மணிக்கெல்லாம் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பின்னர் மெல்ல மெல்ல பா.ஜ.க முன்னேறி வந்து சமநிலை போட்டியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து 10 மணி நிலவரப்படி பா.ஜ.க., லேசான முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும்,இது தொடரும் என சொல்ல முடியாது எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
சாதாரண முடுப்பதில் பிறந்த,டீ விற்ற இந்த நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராகியுள்ளார். நான் இந்த மண்ணின் மைந்தன் என குஜராத்தில் அவர் பிரச்சாரம் செய்தார். இருப்பினும், பா.ஜ.க நிலைமை பெரும் திணறலகிக்கொண்டுள்ளது.

பா.ஜ.க தோற்கிறதோ அல்லது வெற்றி பெறுகிறதோ அது முக்கியமில்லை.22 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சி புரிந்துவந்த மோடியின் சொந்த மாநிலத்தில், இந்த அளவுக்கு பா.ஜ.க நெருக்கடியை சந்தித்திருப்பதே அக்கட்சிக்கு ஒரு பெரிய பாடம்தான். இதன்பிறகாவது மத்தியில் ஆளும் பாஜக தனது கொள்கை முடிவுகளில், ஆட்சி முறையில் பல மாற்றங்களை முன்னெடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார கொள்கைகள்
பா.ஜ.கவின் சமீப கால பொருளாதார கொள்கைகள்தான், குஜராத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 22 ஆண்டுகளாக தொடர்ந்து பா.ஜ.க அங்கு ஆட்சி செய்த அதிருப்தியலைதான் இதற்கு காரணம் என்று பா.ஜ.கவினர் சொல்லி சமாளிக்க கூடும்.

காங்கிரஸ் முன்னேற்றம்
ஆனால், மோடி அளவுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் பிரபலமான ஒரு தலைவர் இல்லாமல் காங்கிரஸ் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளதே பெரிய சாதனைதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மொத்தத்தில் குஜராத் டிரெண்ட் என்பது பா.ஜ.கவுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.






