பருத்தித்துறை குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பருத்தித்துறை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

1-410நேற்றையதினம் (14) வியாழக்கிழமை மாலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த பருத்தித்துறை பொலிசார் களவாடப்பட்ட 35 பவுண் நகைகளையும், களவாடப்பட்ட தொலைபேசிகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் குறித்த களவுச் சம்பவம் தொடர்பில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பருத்தித்துறை குடத்தனையைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறைப் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைதானவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பருத்தித்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த களவுச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் வேறுகளவுச் சம்பவம் தொடா்பான தகவல்களும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபா்களை நீதிமன்றில் ஆஜா்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனா்.