கொழும்பில் காதல் என்ற பெயரில் தமிழ் பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பொரளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே பெண்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
24 வயதுடைய இந்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் விற்பனை முகவராக பணியாற்றி வருகின்றார்.
குறித்த இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். திடீரென ஒரு நாள் இரண்டு பெண்களில் ஒருவருக்கு இளைஞன் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக் பதிவொன்றினால் ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கமைய விசாரித்து பார்த்த போது ஏற்கனவே வேறு ஒரு பெண்ணையும் அவர் காதலித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கும் தனது காதலர் தொடர்பான உண்மை தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய இரண்டு பெண்களும் அவரது காதல் தொடர்பை துண்டித்துள்ளனர்.
எனினும் அந்த இளைஞர் காதலித்த போது இரண்டு பெண்களிடமும் ஆசை வார்த்தைகளை கூறி பணம், பொருட்களை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் இன்னும் ஒரு பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற இளைஞன், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக வீட்டாரிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
இதேபோன்று பல்வேறு பெண்களை அந்த இளைஞன் ஏமாற்றியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுகம் இல்லாத இளைஞர்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு முன்னர் அவதானமாக செயற்பாடு குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






