திமுகவுக்கு தோல்வி பயம் வந்துட்டது… தேர்தல் பிரசாரத்தில் விளாசிய தினகரன்

தோல்வி பயம் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள தினகரன் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறார்.

5a32cb93bd237-IBCTAMILஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுவரும் செய்தி தொலைக்கட்சிகளும் தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரன் தோல்வி பயன் காரணமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே நகர் தொகுதியில் நிச்சயமாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.