நீங்கள் தமிழகத்தில் வெற்றிபெற 400 வருடங்கள் ஆகும்… பாஜகவை விளாசும் ராதாரவி

ஆர்.கே.நகரிலோ அல்லது தமிழகத்திலோ பாஜக வெற்றிபெற 400 வருடங்கள் ஆகும் என நடிகர் ராதாரவி தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே.நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் பாஜக மீதான தனது விமர்சனத்தை முன்வைத்தார். புதிய மருந்தை கண்டுபிடித்தால் அதை சோதிக்க எலிகளை பயன்படுத்துவதுபோல, கரு.நாகராஜனை பாஜக தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராதாரவி தமிழகத்தில் பாஜக வெற்றிபெற 400 வருடங்கள் எடுக்கும் தெரிவித்த அவர் ஆர்.கே.நகரில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை விட பாரதிய ஜனதா கட்சியால் அதிக வாக்குகள் பெறமுடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

5a336f0e9184c-IBCTAMIL