சிறுமியை மரண சித்ரவதை செய்து கற்பழித்த கொடூரன்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஆறு வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.

ஹரியானாவில் Hisar பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை இரவு காணமல் போயுள்ளார். இதனால் பெற்றோர் இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிந்திருந்த நிலையில், மறுநாள் காலை சிறுமி மிகவும் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

உடனடியாக பொலிசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமியின் உடலில் 10 அடி நீளமுள்ள குச்சியை செலுத்தி சித்ரவதை செய்து கற்பழித்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி சிறுமியின் வாய், கழுத்து, தொண்டை மற்றும் இடுப்பு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொலைகாரனை கைது செய்யும் வரை, உடலை வாங்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 625.500.560.350.160.300.053.800.900.160.90 (8)