மாடலிங் துறையில் இருப்பவர்கள் சினிமாவிலும் கால்பதிக்கிறார்கள். பிரபலமாக இருந்த ஒரு இளம் மாடலிங் அழகிக்கு நடந்துள்ள சம்பவம் பலருக்கும் பெரிதும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
அவர் டச்சு நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகி. அவரின் பெயர் இவான எஸ்தர் ராபர்ட் ஸ்மித். 2014 ல் மலேசியாவின் சூப்பர் மாடல் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
19 வயதான இவர் மலேசியாவின் பட்டாலிங் ஜெயா என்ற இடத்தில் தங்கி மாடலிங் செய்துவருகிறார்.அடுக்குமாடி குடியிருப்பின் 20 வது மாடியில் நின்று கொண்டிருந்தவர் 6 வது மாடி பால்கனியில் தவறி விழுந்துள்ளார்.
சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியான அவர் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். போலிஸ் விசாரணையில் 20 வது மாடியில் அமெரிக்கர் ஒருவருடனும் இன்னொரு பெண்ணும் அவருடன் இருந்துள்ளனர்.
அவர்கள் தூங்க சென்றபின் இவானா போதையில் தவறிவிழுந்திருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் மரணம் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.







