கடந்த 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
செயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின, ஆயினும் நிகழ்படமோ அல்லது காணொளி காட்சியோ வெளியாகவில்லை.
இதனால் விசாரணைக்கு ஆணையிடக் கோரி சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சுப. உதயகுமாரன் தெரிவித்து இருந்தார்.
காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செயலலிதா மரணம் வரை வேறு யாரையும் நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
சசிகலா நடராசன், செயலலிதாவிற்கு விஷம் கொடுத்து கொன்றதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்களும் வெளியாகின.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த அழுத்தம் காரணமாக ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,
ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் ஜெயலலிதா வைத்த கைரேகை பற்றி வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த கைரேகைக்கு சான்றொப்பம் இட்டார் டாக்டர் பாலாஜி.
இந்த நிலையில், விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார். உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரை நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார்,
அவருக்கு, நான் சிகிச்சை அளிக்கவில்லை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும்தான் சிகிச்சை அளித்தனர்’ என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார் என்பதில் பல மர்ம தகவல்களே வந்து கொண்டிருக்கின்ற நிலையில் டாக்டர் பாலாஜி அளித்துள்ள விளக்கம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக மருத்துவர் சங்கர் வருகின்ற 12-ம் தேதியும், தீபக்.14-ம் தேதியும், மாதவன் 15-ம் தேதியும், டாக்டர் மகேந்திரன் 19-ம் தேதியிலும் ஆஜராக உள்ளனர்.
இன்னும் விறுவிறுப்பூட்டும் வகையில், தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ம் தேதியும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் 21-ம் தேதியும் ஆஜராகவும் சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை ஆணையம்.