ஆப்கானிஸ்தான் விக்கெட் பாதுகாவலருக்கு கிரிக்கெட் விளையாட தடை!

ஆப்கானிஸ்தான் விக்கெட் பாதுகாவலருக்கு கிரிக்கெட் விளையாட  தடை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் பாதுகாவலர்  முகமது ஷாசத்திற்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் ஆப்கானிஸ்தான் விக்கெட் பாதுகாவலருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் பாதுகாவலர்  முகமது ஷாசத் சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கப்பட்டார்.

இதன் முடிவில் ‘கிளன்புடெரோல்’ என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது அம்பலமானது. இதையடுத்து அவருக்கு ஓராண்டு விளையாட தடைவிதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கவனக்குறைவாக இந்த மருந்தை பாவித்துள்ளார் என்பது இதன்போது தெரியவந்தது.

இந்நிலையில் மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 17–ந்தேதி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப சாத்தியம் உள்ளது  என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

29 வயதான ஷாசத் இதுவரை 58 ஒரு நாள் போட்டிகளிலும், 58 இருபது இருபது  போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.