சண்டிகர் : 2 வது மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து மன்மோகன் சிங் என்பவர் 2 வதாக கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கவுருக்கும் குழந்தை உள்ளது. மன்மோகன் சிங்கிற்கும் குழந்தைகள் இருந்துள்ளது. தொடர்ச்சியாக முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்து வந்துள்ளார்
கவுர். சித்தி (2வது மனைவி) தனது தங்கையை சித்ரவதை செய்வதை தந்தையிடம் காண்பிக்க தனது மொபைலில் பதிவு செய்துள்ளார் மன்மோகன் சிங்கின் மகன்.
சிறுமியின் காலை உடைத்து கட்டுப்போட்டுள்ள நிலையில் கவுர் அந்த சிறுமியை சித்ரவதை செய்யும் ஒரு காணொளியும்.
ஒரு பையில் போட்டு மூடி கொடுமை படுத்தும் வீடியோவும் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பெண் தலைமறைவாகியுள்ளார்.
காணொளியில் சித்தி முதல் மனைவியின் குழந்தையை கொடுமைப்படுத்துகின்றார். அதை சித்திக்கு பிறந்த குழந்தை இன்னும் பன்னு எனக் கூறுவதை காண முடிகின்றது. பிங்சிடமும் நஞ்சை விதைத்துள்ள பெண்.