சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் தமிழ் படம் இது தான்.!

சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் தமிழ் படம் இது தான்.!

தமிழில் பாடல் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் சரித்திர படமான இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தில் சாகஸராணி வேடத்தில் நடிக்கிறார் சன்னி லியோன். இவரை இந்த படத்தின் ஹீரோயினாக தேர்ந்தெடுக்க காரணம் இவர் இந்திய முழுவதும் தெரிந்த முகம் என்பதால்.

சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் தமிழ் படம் இது தான்.!

இந்திய பிரபலமாக இவர் இருப்பதால் தான் ஒரே கதாநாயகி வைத்து நான்கு மொழிகளிலும் படம் தயாரிக்க முடிகிறது என்று கூறினார் இயக்குனர், பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை 2.0 மற்றும் பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்த தொழிநுட்பக் குழுவினரிடம் ஒப்படைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் நவ்தீப் நடிக்கவிருப்பதாகவும், தற்போது தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான அளவில் தனது உடலமைப்பை கச்சிதமாக மாற்றும் வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.