டெல்லி காற்று மாசுபாடு: முகமூடி அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் 3- வது டெஸ்ட் போட்டியின்போது, டெல்லியில் உள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.

yhiyu

 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டியானது டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 536 ரன்களுக்கு 7 விக்கெட் பறிகொடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் விராட்கோலி அதிகபட்சமாக 243 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கை அணி சார்பில் சண்டகன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

 

இப்போட்டியின்போது டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக இலங்கை அணி வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.