உடல்நல குறைவால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திய கமலஹாசன். உடல் நலம் தேரியதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் பிஸியாகிவிட்டார் கமல் ஹாசன். பிறகு இவர் மூன்று மாதங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் பேசுவதில் கவனம் செலுத்த, ஒரு வழியாக அரசியலில் கால் எடுத்து வைத்துவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான காலத்திலேயே சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகடமியில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பை ஓரிரு நாட்கள் நடத்தினார். இப்போது மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பை சில நாட்கள் நடத்தியுள்ளார். கடந்த நான்கு வருடங்களாக வருமா வராதா என்று இருந்த விஸ்வரூபம் 2 படத்தின் மொத்த பிரச்சனையையும் சில மாதங்களுக்கு முன்பே முடித்துவிட்ட கமல்ஹாசன், இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பை முடித்து படத்தை 2018ம் ஆண்டில் வெளியிட முடிவு செய்துள்ளார். அதற்கான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.