இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள்: இலங்கை மத்திய வங்கி அறிக்கை!

இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள்: இலங்கை மத்திய வங்கி அறிக்கை!

இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மொத்த சனத்தொகையில்  7.9 வீதம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வாழ்வாதாரங்களை வழங்கி பொருளாதார  ரீதியாக பாதுகாக்க வேண்டும் என்பேதாடு சமூகத்தில் மதிப்பு பெற்று அவர்களும் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற பரிந்துரையும் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

புள்ளி விபர திணைக்களத்தின்  அறிக்கையின் படி ஒவ்வொரு 1000 ஆண்களில் 77 ஆண்களும் ஒவ்வொரு 1000 பெண்களில் 96 பெண்களும் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் காணப்படும் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளில் 43 வீதம் ஆண்களாகவும் 57 வீதம் பெண்களாகவும் காணப்படுகின்றனர்.