
பெரிய பட்ஜெட் படம் என்றால் மனதில் வருபவர் இயக்குனர் ஷங்கர் தான். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தமிழில் கொடுத்த அணைத்து படங்களுமே மிக பெரிய ஹிட் தான். அந்த வகையில் இவரது கதைகள் அமையும். இவர் மிக பெரிய ஹிட்டான மெர்சல் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்காக ஒரு பிரமாண்டமான கதை இயக்கி வருகிறார்.

இவர் தற்போது அவரது ஏதிர்கால ஆசைகள் குறித்து பேட்டியில் பேசியுள்ளார், அவர் பேசியதாவது: ரஜினி-கமல், விஜய்-அஜீத் ஆகிய நடிகர்களை இணைத்து படம் இயக்க வேண்டும் என்கிறது எனது ஆசை. இதுபோன்ற முயற்சிகளில் இறங்கி சில இயக்குனர்கள் பின்வாங்கிய நிலையில், எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளில் இறங்கப்போவதாக சொல்லும் அட்லிக்கு, ராஜமவுலி பாணியில் பிரமாண்ட சரித்திரப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.






