இயக்குனர்கள் சினிமா கதை எழுத கூடாது; அரசியல்வாதிகள் தான் எழுதுவார்கள்!!

இயக்குனர்கள் சினிமா கதை எழுத கூடாது; அரசியல்வாதிகள் தான் எழுதுவார்கள்;

சினிமா என்றாலே கதை என்று தான் அர்த்தம், அந்த வகையில் கதைகளை அமைக்கும் சுதந்திரம் எங்க நாட்டு இயக்குனர்களை விட அரசியல்வாதிகளிற்கு தான் அதிகம் போல் தெரிகிரயது. மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று மக்களை ஆள அரசியல்வாதிகளை உருவாக்கினால், இவர்களோ இயக்குனர்கள் பின் சென்று “இந்த படத்திற்கு என்ன கதை” “அந்த படத்திற்கு என்ன கதை” என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் அரசியல்வாதிகளை கொண்டு எங்க நாடு எப்படி முன்னேற போகிறதோ என்று நினைத்தால் தூக்கம் கூட வரவில்லை என்று மக்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர்கள் சினிமா கதை எழுத கூடாது; அரசியல்வாதிகள் தான் எழுதுவார்கள்;

அந்த வகையில் நாம் அறிந்தது தான், பத்மாவதி போன்ற நல்ல படங்களுக்கு ஏதிராக கிளம்பிருக்கும் ஏதிர்ப்பை மற்ற படங்களுக்கும் பரவ விடாமல் தடுக்க, சினிமா மற்றும் கலை துறையில் இருப்பவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் திரைப்படங்களுக்கு எதிராக வரும் சர்ச்சைகள் மற்றும் தடை ஆகியவற்றை எதிர்த்து வரும் ஞாயிற்றுகிழமை Indian Films and TV Directors’ Association (IFTDA) அமைப்பு மற்றும் 19 சினிமா துறையை சேர்ந்த சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல் 4.30 மணி வரை இந்தியாவில் நடக்கும் அனைத்து சினிமா மற்றும் டிவி ஷூட்டிங் நிறுத்தப்படும் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.