எதிர்கட்சிகளை சந்திக்க மோடிக்கு திராணியில்லை – விளாசும் சோனியா.!

எதிர்கட்சிகளை சந்திக்க மோடிக்கு திராணியில்லை - விளாசும் சோனியா.!

வழமையாக நவம்பர் 3வது வாரம் துவங்கி டிசம்பர் மூன்றாவது வாரம் வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பது மரபு. ஆனால், இவ்வாண்டு டிசம்பர் 2வது வாரத்தில் குளிர்கால கூட்டத்தொடரை தொடங்கி 10 நாட்களிலேயே நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்கட்சிகளை சந்திக்க மோடிக்கு திராணியில்லை - விளாசும் சோனியா.!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, “நேர்த்தியாக திட்டமிடப்படாத ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டிய பிரதமர் மோடியால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சந்திக்க தைரியம் இல்லை. குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணிப்பதன் மூலம், மோடி அரசு, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்தப்போகிறது. ஜனநாயகத்தின் கோயில் நடையை சாத்திவிட்டால், அரசியல் சாசன பொறுப்புகளை புறம்தள்ளிவிடலாம் என இந்த அரசு நினைக்கிறது.” என மத்திய பாஜக அரசினையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக சாடியுள்ளார்.