தியாகமும், பாரம்பரியமும் மிக்க காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு புதிய தலைமைக்கு தன்னை தயாராக்கி கொள்ளும் நிலைக்கு தற்போது வந்துசேர்ந்துள்ளது. புதிய தலைமை தற்போது வரவுள்ள நபர் மீண்டும் நேரு குடும்பத்தை சேர்ந்தவர் தான். இந்தியாவில் வலசாரி சக்திகள் வலுப்பெற்றுள்ளது, இடசாரிகள் இருந்த இடம் தெரியாமல் கரையத்துவங்கியுள்ளனர். வரும் 2019ம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு சேர்த்து தன்னை பிரதமர் வேட்பாளராக நிலைநிறுத்தி கொண்டுள்ளார் நரேந்திர மோடி.
இவ்வாறு சூழ்நிலைகள் இருக்க காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் ராகுல் காந்தியின் ஆளுகைக்கு கீழ் வந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்ட இருக்கிறார் என்ற செய்தி டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் ராகுல்காந்தியின் கைக்கு காங்கிரஸ் கட்சி வந்துள்ளது. கட்சிக்கு அமித்ஷா, ஆட்சிக்கு மோடி என அசுர வலிமையுடன் வீரநடைபோட்டு வருகிறது பாஜக. இந்நிலையில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதும், காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவம் ராகுல்காந்திக்கு எளிதாக இருக்கபோவதில்லை. இன்னும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு ராகுல்காந்தி தன்னை தயார்படுத்தி கொண்டால் மட்டும் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.