சீனாவில் 34 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. பின்ஹாய் நூலகம் என்பது இதன் பெயராகும்.
சீனாவின் டியான்ஜின் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நூலகமானது, 5 மாடிகளைக் கொண்டது.
மேற்கூரையிலும் புத்தக அலுமாரிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, இங்கு 12 லட்சம் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
கீழ்த்தளம் முழுவதும் படிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு நடுவில் இருக்கும் தளங்களில் அலுவலகங்களும் மேல் தளத்தில் கணினி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
டச்சு கட்டிடக் கலைஞர்களால் 3 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.