நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரூபி ரோஸ்.!

நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரூபி ரோஸ்.!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் பத்மாவதி. இந்த படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக பா.ஜ.க-வினர் படத்தை வெளியிட கூடாது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக பல நடிகைகள் தீபிகா படுகோனேவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகையான ரூபி ரோஸ் ட்விட்டர் பக்கத்தில் அவரது ஆதரவை தீபிகா படுகோனேவிற்கு தெரிவித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரூபி ரோஸ்.!

ரூபி ரோஸ் ட்விட்டரில் பதிவிட்டது இது தான்: எனது தோழிக்கு நடப்பதை படிக்கும் போது உண்மையிலேயே அதிர்ந்து போனேன். ஆனால் அவரின் தைரியமும், உறுதியும் பாராட்டுக்குரியது. தீபிகா, வலிமையான பெண்களில் நீயும் ஒருவர் என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். தீபிகா படுகோனேவும், ரூபி ரோசும் டிபிள் எக்ஸ் ரிட்டன் ஆப் சாண்டர் கேஜ் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.