எந்த மூன்று பெண்களை அழகான பெண்கள் என்று ஷாருக்கான் கூறினார்.?

எந்த மூன்று பெண்களை அழகான பெண்கள் என்று ஷாருக்கான் கூறினார்.?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹிந்தியில் அதிக படம் நடித்திருந்தாலும் தமிழிலும் சில படங்கள் நடித்தது உண்டு. இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகம். இவருக்கு ஆரியன் கான், சுஹானா கான், அபிரா கான் என மூன்று குழந்தைகள் உண்டு, இவர் 52 வயதை கடந்துள்ளார். சமீபத்தில் தான் இவரது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி வெளியிடும் வழக்கம் உண்டு.

எந்த மூன்று பெண்களை அழகான பெண்கள் என்று ஷாருக்கான் கூறினார்.?

அந்த வகையில் சமீபத்தில் கரீனா கபூர், மாதுரி தீட்சித், ஆலியா பட் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒன்று சேர்த்து ட்விட்டரில் வெளியிட்ட ஷாருக்கான் பதிவிட்டது இது தான்: இவர்கள் அழகான பெண்கள். ஏனெனில், ஒவ்வொருவரும் நான் சிறந்த மனிதனாக மாற உதவியவர்கள். நன்றி பெண்களே! எப்போதும் போல வலிமையுடனும் பண்புடனும் இருக்கவேண்டும், என்று நன்றி தெரிவித்திருந்தார்.