பிரபல முன்னணி நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் படம் தான் தானா சேர்ந்த கூட்டம், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும், இந்தப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று பேசப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் இப்போது தான் முற்றிலும் முடிந்துள்ளது. மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதும் நாம் அறிந்ததே அவர்கள் இருவரையும் தவிர்த்து, இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், கார்த்திக், ஆர்.ஜெ.பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆனால் இதில் நடிகை மீரா மிதுன் முக்கிய ரோலில் நடித்திருக்கிறாராம்.
சிறிது நாட்கள் முன்பு தான் இவர் ஒரு நேர்காணலில் அந்த விசயத்தை உறுதிபடுத்தியிருக்கிறார். 8 தோட்டாக்கள் படத்தில் முக்கிய ரோலில் நடித்து கலக்கிய மீரா நடித்த காட்சிகளுக் இந்த படத்தில் சஸ்பென்ஷாக இருக்கிறதாம். தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவர் தன் பற்றிய விசயங்களை சர்ப்பிரைஸாக வைத்துவிட்டாராம். இவரின் கதாபாத்திரம் இப்படத்தின் ரகசியம் போல் தெரிகிறது.