26 வருடங்களின் பின்னர் தனது தாயை சந்தித்த பிரித்தானிய பெண்!

இலங்கையிலுள்ள தமது உண்மையான தாயை 26 வருடங்களின் பின்னர் ஷெரீ எச்செசன் என்ற பிரித்தானிய பெண் இன்று சந்தித்துள்ளார்.

பிரித்தானி தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே தனது தாயை சந்தித்துள்ளார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என்பது விஞ்ஞான ரீதியாக உறுதி

செய்யப்பட்டுள்ளது.

ஷெரீ எச்செசனின் தாயை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையின் முடிவு நேற்றிரவு வெளியானது.

Captureghbfgnvgஷெரீ எச்செசனின் தாயை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையின் பின்னர் டிங்கிரி அம்மா என்பவரின் மரபணுவுடன், எச்செசனின் மரபணு 99.99 வீதம் பொருந்துவதாக பிரித்தானியாவின் எல்பா பயோ லேப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பிறந்து, நிரோஷிகா என பெயர் சூட்டப்பட்ட ஷெரீ எச்செசன் 15 நாட்களின் பின்னர் அயர்லாந்து பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் உதவியுடன் அவரின் உண்மையான தாயை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் 35 பிரபல தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவரான இவரின் உண்மையான தாய் தொடர்பான முக்கியமான தகவல் கடந்த 17ஆம் திகதி வெளியாகியுள்ளது.

ஷெரி எச்சேசன் அயர்லாந்து பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றில் காணப்படும் பெண், எச்சேசனின் தாய் என நம்பப்பட்டது.

அந்தப் புகைப்படத்திலிருந்த பெண்ணும், கண்டறிந்தவரும் ஒரே உருவத்தை ஒத்திருந்தனர்.

ஷெரியிடமிருந்த பிறப்புச்சான்றிதழில் அவரின் தாயார் டிங்கிரி மெனிகா என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கண்டறிந்தவரின் பெயர் டிங்கிரி அம்மா என்பதாகும்.

அந்த சந்தர்ப்பதிலும், டிங்கிரி அம்மாவின் சில புகைப்படங்களை ஷெரீக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உறவுத்தேடல் பயணத்தில் பெற்றுக்கொண்ட தகவல்களும், டிங்கிரி அம்மா வழங்கிய பல்வேறு தகவல்கள் பெரும்பாலும் பொருந்தியிருந்தன.

டிங்கிரி அம்மாவை தமது தாய் என ஷெரி ஏற்றுக் கொண்டாலும், அவரின் சில கருத்துக்களில் தடுமாற்றத்தை அவதானிக்க முடிந்தது.

இந்த உறவுத்தேடல் பயணத்தில் நிபுணர்கள் சிலரும் இணைந்து கொண்டமையால், மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு தரப்பினரின் ஒப்புதலுடன், டிங்கிரி அம்மாவின் மரபணு மாதிரியை, கொழும்பு வடக்கிலுள்ள போதனா வைத்தியசாலையின் உதவியுடன் பெற்று அதனை ஐக்கிய இராஜ்யத்தின் பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசேதனையின் பின்னர், ஷெரீ எச்செசனின் தாய் டிங்கிரி அம்மா என்பது விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஷெரீ எச்செசன் அவரின் உன்மையான தாயை இன்று சந்தித்தார்.

பிரித்தானியாவில் இணையத்தளமூடாக வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஷெரி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.