பெற்றோல் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை வழமைக்குத்திரும்பவுள்ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவையான பத்தாயிரம் மெட்ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளது. எனினும் டீசல் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை.
எனவே டீசலை விநியோகிக்காது பதுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் போத்தல்கள் மற்றும் சிறிய பாத்திரங்களில் பெற்றோல் விநியோகிப்பதை தடுக்கவுள்ளோம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
பெற்றோலை பெற்றுக் கொள்ளும் நிலமை வழமைக்கு திரும்பும் வரையே, இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றுநிரூபத்தை அமைச்சி சற்றுமுன்னர் வௌியிட்டுள்ளது.