உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றினாலே நம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். அதனால் கொழுப்பை கரைக்கும் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் விரைவில் பலனை விரைவில் காணலாம்.
இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை?
- 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 1/2 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் குடல்களில் தங்கும் கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் விரைவில் கரையும்.
- இரவில் குளிர்ந்த அல்லது லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ந்து, உடல் எடை குறையும்.
- பாதாம் பால், தேங்காய் பால், கீரைகள், மற்றும் பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறையும்.
- டார்க் சாக்லேட், சிவப்பு நிற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இரவுகளில் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
- இரவுகளில் தக்காளி சூப் குடிப்பதால், அது உடல் எடையை குறைத்து நச்சுக்களை நீக்கி, இதயத்தில் படியும் கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
- தொடர்ந்து இரவில் சில துண்டுகள் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்கும்.
- அன்னாசி பழத்தை ஜூஸ் செய்து தினமும் இரவில் குடித்து வந்தால், அது ஜீரண மண்டலம் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்கும்.