பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜேன் லெம்பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமைய மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருந்த விடயங்களில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சட்டம் அமுலாக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.
ஆனால் இந்த விடயத்தில் முன்னேற்றம் இல்லாதிருப்பது அதிருப்தி அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்







