இலங்கை பாடசாலையில் மாணவியை கர்ப்பம் என தவறாகக் கூறிய அதிபருக்கு ஆப்பு!

கெக்கிராவையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் எனக் கூறி, மாணவியை பாடசாலையை விட்டு இடை நிறுத்திய அதிபர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோரின் விருப்பத்திற்கு அமைவாக ஒரு பாடசாலையைத் தெரிவு செய்து அதில் குறித்த மாணவியை படிக்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.

ice_screenshot_20161101-194153அத்துடன் குறித்த மாணவி பொருளாதார ரீதியில் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் அவரை படிக்கவைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தங்குமிட வசதிகளுடன் கூடிய பாடசாலை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி கெக்கிராவையில் உள்ள அரச பாடசாலையில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பாடசாலை நேரத்தில் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து அதிபரால் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தால் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல்வேறு தரப்புகளில் விசாரணைகள் தீவிரமடைந்திருந்தன.

இதையடுத்து குறித்த மாணவிக்கு அவருடைய கல்வியை தொடர்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை அதிபர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.