முதலீட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – சீன வெளிவிவகார அமைச்சர்

முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை பீஜிங்கில் இன்று சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, சீன வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘Belt and Road Initiative வரையறைக்குள், சிறிலங்காவுடனான  ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதை, இதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

wang yi- tilak (1)wang yi- tilak (2)

பாரம்பரிய நட்புறவை பரஸ்பர அரசியல் நம்பிக்கை, பிரதான உட்கட்டமைப்புத் திட்டங்கள், முதலீடு, வர்த்தகம் போன்றனவற்றின் மூலம் வலுப்படுத்த வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுக்களின் முடிவில், இரண்டு நாடுகளின் சார்பிலும், பரஸ்பர சட்ட உதவி உடன்பாட்டுக் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.