என்னை நான் கவனித்து கொள்வேன்: விஷால் அதிரடி!

பிரபல திரைப்பட நடிகரான விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்துவதாக செய்திகள் வெளியானது, ஆனால் அதிகாரிகள் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான படத்தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியானது.

ஆனால், ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்து நடிகர் விஷால் கூறுகையில், என் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தவில்லை, வருமான வரித்துறையினர் தான் சோதனை மேற்கொண்டனர்.

நேர்மையாக வரிகளை செலுத்தி வருவதால் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. இது அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்பட்டதா? என தெரியவில்லை. அப்படி இருந்தாலும் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறேன்.

மேலும் இது போன்ற சோதனைகளை தாம் தனிப்பட்ட முறையில் சமாளித்துக் கொள்வேன் என்றும் கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் 3 பேர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

vishal567-04-1499113151