ஊவா மாகாண தமிழ் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பட்டதாரிகள் தங்களுக்கான ஆசிரிய தொழில் நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எந்த தரகர்களையும் அணுக வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் தமிழ் பட்டதாரிகள் சிலர் ஆசிரிய தொழில் நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்தி ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் குறித்த முறைபாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஊவா மாகாண சபை மேற்கொண்டிருப்பதாகவும் ருத்திரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

DSC08065