எடப்பாடிக்கு தினகரன் கொடுத்த ஷாக்!

அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து வந்த ராமாவரம் தோடத்தில் கொண்டாப்படும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.

எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்த பின், தினகரன் தனி அணியாக பிரிந்தது.

தற்போது, கட்சியின் 46 ஆண்டு துவக்க விழா அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ttv_dinakaran_intervier_1_16261இந்நிலையில், அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா வருகிற 24ம் தேதி, ராமாவரம் தோட்டத்தின் நுழைவு வாயிலில் நடைபெறும் என தினகரன் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா பற்றி, எடப்பாடி தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடத்தில் விழா கொண்டாடப்படும் என்கிற தினகரனின் இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.