கனடிய மருத்துவமனையில் மூளைக் கட்டிகளை அழிக்க புதிய வழி..!!

ஆக்ரோஷமாக புற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் கருவி ஒன்றை சனிபுறூக் வைத்தியசாலை வெளியிட்டுள்ளது.இந்த வகை முதன் முதலில் கனடாவில் குறிப்பிட்ட வைத்தியசாலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

hospital

Gamma Knife Icon எனப்படும் இதனால் குறைந்த டோஸ் கதிர் வீச்சை மூளையில் இருக்கும் கட்டிகளை மட்டும் துல்லியமாக அகற்ற பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை உலகிலேயே மிகவும் துல்லியமான மூளை கதிர்வீச்சாகும் என சனிபுறூக் வைத்தியசாலையின் கதிர் வீச்சு புற்றுநோய் துறையின் துணை தலைவர் டாக்டர் அர்ஜூன் ஷாகல் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக ஒரு மில்லி மீற்றர்களிற்கும் குறைந்த அளவு துல்லியமான குவிய கதிர்வீச்சு வழங்கலாம் என கூறப்படுகின்றது.கடந்த யூன் மாதத்திலிருந்து நோயாளிகளிற்கு இச்சிகிச்சை வழங்கப்படுகின்றதென அறியப்படுகின்றது.

இச்சிகிச்சை மூலம் நோயாளிகள் நீண்ட காலம் வாழலாம். முழு மூனை கதிர் வீச்சும் தடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது. மண்டைக்குள் துளைத்தலும் தேவைப்படாது