ஓர் ஆண்டாக வீட்டின் அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்ட நபர்: நேர்ந்த பிரச்சனை..!!

வீட்டிலிருந்த அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்டு தண்ணீரை வீணாக்கிய நபர் பரிசோதனைக்காக மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

47

ஜேர்மனியின் Salzgitter நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 31 வயதான நபர் கடந்த ஓர் ஆண்டாக தனது வீட்டில் இருந்த அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்டுள்ளார்

இதன் காரணமாக 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாக்கப்பட்டுள்ளது. இது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளை நோக்கியும் தண்ணீரை செலுத்தியுள்ளார்.

இதையடுத்து எல்லோருக்கும் விடயம் தெரிந்து பொலிசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார்கள்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த நிலையில், குறித்த நபர் அவர்களுடன் சண்டை போட்டுள்ளார், இதில் மூன்று பொலிசாருக்கு காயம் ஏற்பட்டது.

அவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மனநல மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையில், மலையளவு தண்ணீரை வீணாக்கிய நபர் €10,800 பணம் கட்ட தண்ணீர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.சராசரியாக ஒரு ஜேர்மனியர் வருடத்துக்கு 44,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே உபயோகப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது