கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் ஈபிடிபி!

வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

image_1476468605-0ccab3bfba

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, ரெலோவில் இருந்து பிரிந்த சிறிரெலோ அணி ஆகியவற்றுடன், ஈபிடிபி ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை வரவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும், வேட்பாளர்களை நிறுத்த ஈபிடிபி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.